#Breaking கரையை கடக்கத் தொடங்கியது மாண்டஸ்… சூறைக்காற்று சுழன்றியடிக்குமாம்!

மாண்டஸ் புயலின் வெளிப்புறப் பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கே 60 கிலோ மீட்டர் தொலைவில் மாண்டஸ் புயலானது நிலைக்கொண்டுள்ளது. வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி, மணிக்கு 14 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயலின் வெளிப்புற பகுதியானது கரையைக் கடக்க ஆரம்பித்துள்ளது.

புயல் கரையைக் கடக்க ஆரம்பித்துள்ளதால் சென்னை மழை பெய்வது குறைந்துவிட்டாலும் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் 50 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது.

புயலின் வெளிப்புறமானது கரையை கடந்து வரும் மாமல்லபுரம் பகுதியில் காற்றின் வேகம் சென்னையில் வீசுவதை விட 15 முதல் 25 கிலோ மீட்டர் வரை அதிகமாக இருக்கக்கூடும் எனக்கூறப்படுகிறது. காற்றின் வேகத்தைப் பொறுத்து மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் அசம்பாவிதத்தை தவிர்ப்பதற்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.