ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு சைக்கிளில் சென்று ஆய்வு செய்த புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஆட்சியர் இருக்கின்றார்கள் ஆனால்  சில மாவட்ட ஆட்சியர்கள் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக தனித்தன்மையுடன் இருப்பார்கள் அப்படி ஒரு ஆட்சியர்தான் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.

நேற்று கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு நடந்தது அப்போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு என்பவர் சைக்கிளிலேயே சென்று ஊர் முழுவதும் ஆய்வு செய்தார்.

கவிதா ராமு என்பவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கடந்த 2021 ஜூன் மாதம் பொறுப்பேற்றார். பொறுப்பேற்றது முதல் பல அதிரடிகளை செய்து வருபவர் வித்தியாசமான கலெக்டர் என பெயரெடுத்தவர்.

நேற்று கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு சரியாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் பொருட்டு ஊர் முழுவதும் ரவுண்ட் வந்தார்.

மாஸ்க் இல்லாமல் வந்தவர்களுக்கு மாஸ்க் அணிய சொல்லி அறிவுரை வழங்கியதுடன் அவர்களுக்கும் மாஸ்க் கொடுத்து அணிய சொன்னார்.

பின்னர் காவல்துறையினரை சந்தித்து எத்தனை வழக்குகள் பதிவாகி இருக்கிறது என கேட்டு தெரிந்து கொண்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment