Connect with us

உஷார்: வாட்ஸ் ஆப்பில் வந்த லிங்கை, கிளிக் செய்ததால் பல லட்சத்தை பறித்த சைபர் கிரிமினல்கள்

facebook and whatsapp

தமிழகம்

உஷார்: வாட்ஸ் ஆப்பில் வந்த லிங்கை, கிளிக் செய்ததால் பல லட்சத்தை பறித்த சைபர் கிரிமினல்கள்

வாட்ஸப்பில் வந்த லிங்க், கிளிக் செய்ததால் இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம், முதலீடு ஆசையை தூண்டி 12 லட்சம் ரூபாயை நான்கே நாட்களில் பறித்து சைபர் கிரிமினல்கள்.

வழிப்பறி, திருட்டு, கொலை, கொள்ளை அவ்வப்போது நடந்தாலும் நொடி பொழுதும் இடைவிடாது நடக்கிறது சைபர் குற்றங்கள். விதவிதமான விளம்பரங்கள் ஆசையை தூண்டும் அறிவிப்புகள் பலரை சைபர் கிரைம் குற்ற கும்பலால் பலி கெடா செய்கின்றனர். அந்த வகையில் கோவையை சேர்ந்த இளம் பெண் தொழிலதிபர் சைபர் கிரைம் குற்றவாளிகளால் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்.

அந்த பெண் எதார்த்தமாக அலைபேசியை பயன்படுத்தி வந்த போது அவர் வாட்ஸப்புக்கு ஒரு லிங்க் வந்திருக்கின்றது. வாட்ஸப் லிங்க் கிளிக் செய்த அந்த பெண்ணுக்கு பிரபரல நிறுவனமான அமேசான் வலைதளம் ஓபன் ஆகியிருக்கின்றன. அந்த இணையம் தளத்தின் உள்ளே சென்று பார்த்தபோது அதில் முதலீடு குறித்த விவரங்கள் இருந்திருக்கின்றன. 200 ரூபாய் முதலீடு செய்தால் 300 ரூ கிடைக்கும் என தெரிவித்திருக்கின்றனர்.

இதே போன்று ஒரு குறிப்பிட்ட தொகைக்கு ஒரு குறிப்பிட்ட வட்டியுடன் முதலும் பெருந்தொகை கிடைக்கும் எனவும் தேவைப்படும் நேரத்தில் ட்ராஃப்ட் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவித்திருக்கின்றனர். இந்த உரையாடல் அனைத்தும் வாட்ஸப்பில் மட்டுமே நிகழ்ந்திருக்கின்றன. இளம் தொழில் அதிபரான அந்த பெண்ணும் கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்திருக்கின்றார்.

இந்த நிலையில் நான்கே நாட்களில் இளம் பெண் தொழில் அதிபர் 12 லட்சம் ரூபாய் பணத்தை ஆன்லைனில் முதலீடு செய்திருக்கின்றார். பின்னர் முதலீடு செய்த பணத்தை வித் டிரா செய்ய முடிவு செய்த பெண் ஆனலைனில் அவர்களை அணுகியிருக்கின்றார். ஆனால் அவர்களை பிடிக்கமுடியவில்லை. வாட்ஸப்பில் பேச முடியவில்லை. அலைபேசியும் சுவிட்ச் ஆஃப். அப்போதே தெரியவந்தது வாட்சஸப்பில் வந்தது லிங்க் அல்ல ஆன் லைன் ஆசாமிகள் விரித்த வலை என்று.

பெண்ணின் முதலீடு ஆர்வத்தை சாதகமாக பயன்படுத்திய சைபர் கிரிமினல்கள் கவர்ச்சிகரமான முதலீட்டு விளம்பரங்களை தந்து பெண்ணை முதலீட்டுக்கு ஈர்த்திருக்கின்றனர். பின்னர் முதலீடு செய்த பணத்திலிருந்து குறிப்பிட்ட தொகையினை வித் டிரா செய்ய அந்த பெண் முடிவு செய்த நிலையிலேயே அவர் சைபர் கிரிமினலகளால் ஏமாற்றப்பட்டது தெரியவந்தன.

இந்த நிலையில் பெண் சிட்டி சைபர் கிரை போலிஸில் புகார் தந்து குற்றவாளிகளை பிடிக்க கோரியிருக்கின்றார். அதனடிப்படையில் சிட்டி சைபர் கிரைம் போலிஸார் ஐபிசி 420, 66 மற்றும் 2008 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபல நிறுவனமான அமேசான் பெயரிலேயே அதுவும் படித்த இளம் பெண் தொழில் அதிபரை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்த ஆசாமிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கின்றன. முதலீட்டு ஆர்வத்தை மூலதனமாக கொண்டு நடக்கும் நூதன ஆன் லைன் வழிப்பறியில் இருந்த தப்ப விழிப்புடன் இருக்க சைபர் கிரைம் போலிஸார் வலியுறுத்துகின்றனர். சமூக வலைதளத்தை பயன்படுத்தும் போது நல்லது கெட்டது அறிந்து பயன்படுத்தவும் போலிஸார் அறிவுறுத்தியிருக்கின்றனர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top