Connect with us

‘வொர்க் பிரம் ஹோம்’ என மோசடி செய்தவர்களை வெளுத்து விட்ட சைபர் க்ரைம் போலிசார்

work from home

செய்திகள்

‘வொர்க் பிரம் ஹோம்’ என மோசடி செய்தவர்களை வெளுத்து விட்ட சைபர் க்ரைம் போலிசார்

Work From Home இணையதளத்தில் வேலை தருவதாக மோசடி செய்த ரூபாய் 2 லட்சம் புகார்தாரருக்கு பெற்று தந்தது சைபர் க்ரைம் போலிசார்

கடந்த 3.5.2022 முதல் 8.5.2022 வரை ஆரோவில் பகுதியில் சேர்ந்த பெண் அஞ்சு வ/26 என்பவர் இணையத்தில் வேலை தேடுதல் தொடர்பாக தேடியதில் வொர்க் பிரம் ஹோம் என்ற லிங்கை உபயோகித்து வேலை தேடியதாகவும்,

இதன் மூலம் அவருக்கு வந்த அழைப்புகளில் இருந்து வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் இணையதளங்கள் வழங்கப்பட்டதாகும் இதனால் இவர் முன் பணமாக சிறிது சிறிதாக ரூபாய் 2 லட்சத்து 415 ரூபாய் Google pay மூலம் சம்பந்தப்பட்ட லிங்க்ல் இருந்து அனுப்பப்பட்ட அக்கவுண்டுகளுக்கு அனுப்பியதாகவும்.

ஆனால் இவர் வேலை செய்தும் சம்பளம் மற்றும் இவர் கட்டிய முன்பணம் திருப்பி தராததால் புகார் அளித்ததின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில் சம்பந்தப்பட்ட இணையத்தில் விசாரணை செய்தும் புகார் பணம் அனுப்பிய அக்கவுண்டுகளை முடக்கம் செய்து அதில் இருந்து புகார்தாரர் அனுப்பிய இரண்டு லட்சத்து பணம் மீண்டும் புகார்தாரர் வங்கி கணக்கிலேயே திருப்பி செலுத்தப்பட்டது.

அதற்கான காசோலையினை நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஞ்சுவுக்கு நேரில் வழங்கினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top