மொபைல் ஆப் மூலம் பெண்களை ஏலம் விட்ட இளைஞர் கைது

கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன் வந்த பிறகு குற்றங்கள் அதிகரித்து விட்டன என சொல்லலாம் அதிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ரொம்பவே அதிகரித்து விட்டன.

மொபைல் வந்த பிறகு அதுவும் ஆண்ட்ராய்ட் மொபைல் வந்த பிறகு பெண்களும் பல இணைய தளத்தில் வலம் வருகின்றனர்.

இணையத்தில் இருந்து பெண்களின் புகைப்படத்தை எடுத்து அதை புள்ளிபாய் என்ற ஆப்பின் மூலம் ஏலம் விட்ட 21 வயது சிறுவனை பெங்களூர் போலீசார் கைது செய்தனர்.

புல்லிபாய்’ செயலி குறித்து சிவசேனா எம்.பி.பிரியங்கா சதுர்வேதி என்பவர் மும்பை போலீஸிலும், டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் பத்திரிகையாளர், டெல்லி காவல்துறையிலும் புகார் செய்திருந்தனர்.

இரு நகரங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீஸார் விசாரணையைத் தொடங்கியதில் தான் பெங்களூர் 21 வயது மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

ஹிட்ஹப் ஆப்ஸ் மூலம் சல்லிடீல்,புல்லிபாய் ஆகிய பெயர்களில் வரும் அந்த செயலியில் முஸ்லிம் பெண்களின் புகைப்படத்தை பதிவிட்டு, ‘டீல் ஆஃப் தி டே’ என்ற தலைப்பில் ஏலம் விடும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தலையிட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ராகேஸ் அஸ்தானா இந்த விவகாரம் குறித்த நடவடிக்கை சம்பந்தமாக 10ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு போலீசாருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதில் அதிகம் பாதிக்கப்பட்டது இஸ்லாமிய பெண்கள் என்பதால் அவர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் பெங்களூருவில் இந்த விவகாரம் தொடர்பாக 21 வயது இஞ்சினியரிங் மாணவரை கைது செய்துள்ளனர்.

அவனின் படிப்பு வயது போன்றவற்றை காரணம் காட்டி அவனைப்பற்றிய தகவல்களை வெளியிட போலீசார் மறுத்து உள்ளனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment