சீயான் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இயக்குநர் அஜய் ஞானமுத்து எழுத்து,இயக்கத்தில் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோவின் பேனரின் கீழ் எஸ்.எஸ். லலித் குமார் தயாரித்து வரும் இந்த படம் ஆக்ஷன் த்ரில்லர் படமாகும்.இத்திரைப்படம் வில்லனாக இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிக்கயுள்ளார்.
இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.தமிழகத்தில் மட்டும் 800-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.
படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் விக்ரம் இந்த படத்தில் 7 விதமான கேரக்டரில் நடித்துள்ளது ஒரு பலமாக அமைந்துள்ளது.இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.
எனக்கு இந்த சம்பளம் போதும் என முடிவெடுத்த ரஜினி! தலைவர் 170 படத்தின் அப்டேட்!
கோப்ரா திரைப்படம் மூன்று மணிநேரம் மூன்று நிமிடம் மூன்று விநாடி நீளம் கொண்டதால் படத்தின் தோல்விக்கு ஒரு காரணமாக விமர்சனங்கள் வர தொடங்கியுள்ளது.ரசிகர்களிடம் கலவையான வரவேற்பை பெற்றது. இப்போது, படம் விரைவில் OTT க்கு வர வாய்ப்புள்ளது, மேலும் சோனி LIV படத்தை அடுத்த வாரம், இம்மாதம் 23 ஆம் தேதி வெளியிடும் என்று வட்டாரங்கள் கூறுகின்றன. அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் .
பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷன்களை முடித்துவிட்டு ரஞ்சித்துடன் நடிக்கும் படத்திற்கான படப்பிடிப்பை தொடங்க விக்ரம் தயாராகி வருகிறார். நடிகர் துருவ நட்சத்திரத்தின் இறுதி அட்டவணையை விரைவில் முடிக்கவுள்ளார், பின்னர் முழு வீச்சில் ரஞ்சித்தின் படத்திற்கு செல்லவுள்ளார்.