
செய்திகள்
கியூட் நுழைவுத் தேர்வு அட்டவணை வெளியீடு;; அதிர்ச்சியில் மாணவர்கள்!!!
மத்திய பல்கலைக்கழங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் கியூட் எனப்படும் பொதுநுழைவுத் தேர்வு அட்டவணை தேர்வு தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் உயர் கல்வித்துறையின் கீழ் மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. இந்த பல்கலை கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதாக பல்கலைக்கழக மானியக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதனிடையே ஆர்வமுள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மானிய பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் இதில் இணைந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம் உட்பட 13 மொழிகளில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுக்காக 10 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருக்கும் நிலையில் நாடு முழுவதும் 544 மையங்களில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
இந்நிலையில் குறுகிய கால இடைவெளியில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
