செம்ம வைரல்..! பிரபல பாடகியின் பாடலை பாடி அசத்தும் குட்டி பூனை ….

இணையத்தில் குறும்பு பூனைகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. நாய்களுக்கு அடுத்ததாக செல்ல பிராணியாக வளர்க்கப்படுவது பூனை தான். ஒரு குழந்தைகள் போல குறும்பு தனம் செய்து கொண்டே இருக்கும்.

அச்சமயத்தில் கோபத்தை விட அது செய்யும் குறும்பு தன்மையை ரசிக்கும் தருனம் தான் அதிகம். தற்சமயம் இணையத்தில் இது போன்ற வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது.

இந்த வீடியோ  இணைய வாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த வீடியோவில் பிரபல ஆங்கில பாடகியான அடிலீன்ஈஸி ஆன்மி என்ற பாடலை பாடுவது போல் உள்ளது.

அந்த பாடலில் வரும் ராகத்தோடு ஒத்துபோகும் குரல் கேட்போரை ரசிக்க வைத்துள்ளது. ஸ்பென்னி என்ற இந்த பூனைக்கு இன்ஸ்டாகிராமில் 4.4 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளன.

இந்த பூனை தற்போது பாடியுள்ள பாடலானது பிரபல பாடகியின் பாடலை போல் இருப்பதாக பல நெட்டிசன்கள்  லைக்குகளை குவித்த வண்ணமாக உள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment