ஹர்திக் பாண்ட்யாவிடம் ரூ.5 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது அவரிடம் ரூபாய் 5 கோடி மதிப்புள்ள இரண்டு கை கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்திய கிரிக்கெட் அணியினர் சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டிற்கு உலக கோப்பை டி20 போட்டியில் கலந்துகொள்ள சென்றார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் போட்டியை முடித்துவிட்டு ஹர்திக் பாண்ட்யா இந்தியா திரும்பிய போது அவரிடமிருந்து இரண்டு விலைமதிப்புள்ள கை கடிகாரங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்

அந்த கை கடிகாரங்கள் மரகத கற்கள் மற்றும் பிளாட்டினத்தின் ஆனது என்றும் அதற்கான ஆவணங்களை பாண்ட்யா வைத்திருக்கவில்லை என்றும் இந்த கைக்கடிகாரங்களின் மதிப்பு 5 கோடி என்றும் கூறப்படுகிறது

இதனை அடுத்து அந்த இரண்டு கைகளையும் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.