Connect with us

சூப்பில் மிதந்த ஈ!! ஊழியரின் பதிலால் வாடிக்கையாளர் அதிர்ச்சி!!

soup

தமிழகம்

சூப்பில் மிதந்த ஈ!! ஊழியரின் பதிலால் வாடிக்கையாளர் அதிர்ச்சி!!

திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல சைவ உணவகத்தில் வாடிக்கையாளருக்கு கொடுக்கப்பட்ட சூப்பில் ஈ மிதந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் உணவக ஊழியர்களிடம் புகாரளித்தார். அப்போது ஈ எடுத்துவிட்டு குடியுங்கள் என உணவக ஊழியர்கள் கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் மற்றும் அவரது நண்பர்கள் உணவக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அதோடு பிரபல உணவகத்தின் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த சில தினங்களாக இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது வாடிக்கையாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top