கறியில் நெளிந்த புழு! ஷாக்கான வாடிக்கையாளர்… சென்னையில் பரபரப்பு!!

நம் தமிழகத்தை பொறுத்தவரையில் சைவ, அசைவ உணவகங்களில் தரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் நிகழ்வு அடிக்கடி இருந்து வருகிறது. இத்தகை செயல்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் சற்றும் குறைந்தபாடில்லை.

சென்னை மதுரவாயில் அடுத்த நெற்குன்றம் பகுதியில் பிரபல உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் உணவு வாங்க வந்த வாடிக்கையாளர் கறியில் புழு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் புழு இருப்பதை வீடியோ எடுத்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வீடியோவை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு எடுத்து அனுப்பியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் உணவகத்தில் ஆய்வு செய்ததில் தரமற்ற உணவு மற்றும் கறி கட்டையில் புழு நெளிவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனை பறிமுதல் செய்து அகற்றினர்.

மேலும், பிரபல உணவகத்தில் தரமற்ற முறையில் புழுக்கள் இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.