Connect with us

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு: முழு விபரங்கள்

Tamil Nadu

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு: முழு விபரங்கள்

e870527bee3a95b148191d6d87912332-2

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை நேற்று அறிவித்து இருந்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது ஒவ்வொரு வகுப்பிற்கும் எத்தனை சதவீதம் பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உள்ளது என்பது குறித்த அறிவிப்பை பள்ளிகல்வித்துறை அரசாணை ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளது 

இதன்படி அந்தந்த வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி இந்த கல்வி ஆண்டில் பாடங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜூன் மாதம் திறக்க வேண்டிய பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை

செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்க வழி வகை செய்யப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர் கூறியிருந்தார். செப்டம்பர் 1-ஆம் தேதி திறந்தாலும் மார்ச் மாதத்திற்குள் முழு பாடத்திட்டத்தையும் நடத்தி முடிக்க முடியாது என்பதால் 50% முதல் 65% வரை பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

b7cb4d2dfeba68510d8f27e7e9eaec27-1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top