Connect with us

தற்போது தமிழகத்தில் முதலிடம் “வால்பாறைக்கே”!!

News

தற்போது தமிழகத்தில் முதலிடம் “வால்பாறைக்கே”!!

8efd99a2431c44ff54259f21a46a1053

தற்போது இந்தியாவில் தென்மேற்கு பருவக்காற்று காலம் தொடங்கிவிட்டது. இதனால் பல பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது அதுவும் குறிப்பாக கேரளா பகுதிகளில் அதிகமாக இந்த தென்மேற்கு பருவக்காற்று மழையால் மழை பெய்யும் என்றும் கூறலாம். இதன் வரிசையில் தற்போது தமிழகத்திலும் அவ்வப்போது மழை செய்யப்படுகிறது மேலும் மழை பெய்யும் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு மட்டுமின்றி அங்கு குடிநீர் பற்றாக்குறையும் தவிர்க்கப்படுகிறது.659dece7ae9969a6be2e12b63cb70a52

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் அதிகபட்சமாக மழையை பெற்று முதலிடத்தில் உள்ளது வால்பாறை. அதன்படி தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டத்திலுள்ள வால்பாறையில் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதோடு மட்டுமின்றி கோவை மாவட்டத்தில் உள்ள மற்றுமொரு ஊராகிய சின்னக்கல்லார்  பகுதியில் ஐந்து சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

ராசிபுரம் பகுதியில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து மேல் பவானி, அவலாஞ்சி, வால்பாறை ,சீர்காழி தேவாலாவில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நடுவட்டம், பந்தலூர் பகுதியில் தலா 2 மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வாணியம்பாடி, வேலூர் ,ஆர்கே பேட்டை, தம்மம்பட்டியில் தலா ஒரு சென்டி மீட்டர் மழை பதிவாகியது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top