விமான நிலையங்களில் பரிசோதனை தீவிரம்!! முன்னாள் அமைச்சருக்கு தற்போதைய அமைச்சர் தக்க பதில்;
நம் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக நம் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இவ்வாறு உள்ள நிலையில் உலக நாடுகளில் சற்று தாறுமாறாக காணப்படுகிறது. உலக நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
அதோடு மட்டுமில்லாமல் XE என்ற புதிய வகை கொரோனாவும் அதிகரித்து வருவதாக தெரிகிறது. நம் இந்தியாவிலும் இந்த நோய் பரவல் வராமல் தடுக்க பல்வேறு விதமான பணிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் இது குறித்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு தற்போதைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தக்க பதிலை கூறினார். விமான நிலையங்களில் பரிசோதனை தீவிரமாக செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். சர்வதேச விமானங்களில் வரக் கூடியவர்களை பரிசோதிப்பது தீவிரப்படுத்துவோம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
XE என்ற புதிய வகை கொரோனா தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை அரசு எடுத்துக் கொண்டு வருகிறது என்று அமைச்சர் கூறினார். சட்டப்பேரவையில் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் கேள்விக்கு மக்கள் நலத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பதிலளித்தார். புதிய கொரோனா ஜூனில் நாடு முழுவதும் பரவும் அபாயம் உள்ளதாக தகவல் என்றும் விஜயபாஸ்கர் கூறினார்.
