Connect with us

சுகாதாரத் துறையில் உலகிற்கே முன்னோடி தமிழ்நாடு!! தற்போதைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை?

கொரோனா

தமிழகம்

சுகாதாரத் துறையில் உலகிற்கே முன்னோடி தமிழ்நாடு!! தற்போதைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை?

உலக அளவில் தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக ஜப்பான் நாட்டில் ஒவ்வொரு நாளும் லட்சத்தை தாண்டி கொரோனா பாதிப்புகள் பதிவாகி கொண்டு வருகின்றன.

இந்தியாவிலும் கூட ஒரு சில மாநிலங்களில் கொரோனாவின் பாதிப்பு சற்று அதிகமாகவே காணப்படுகிறது. ஆயினும் நம் தமிழகத்தில் அதிகரித்த கொரோனா பாதிப்பு மீண்டும் கட்டுப்படுத்த பட்டுள்ளதாக காணப்படுகிறது.

அதன்படி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1228 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை கூறி உள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 1302 பேருக்கு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தலைநகர் சென்னையில் புதிதாக 283 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. நேற்றைய தினம் 298 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று பாதிப்பு குறைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும் இன்று ஒரே நாளில் 1691 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து டிஸ்டார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். எனவே தமிழக முழுவதும் 11,392 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top