Tamil Nadu
மீண்டும் தளர்வுகள் இல்லாத ஊரடங்கா? முதல்வர் இன்று அறிவிப்பு!
தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் 17ஆம் தேதி முதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஒரு சில கடைகள் தவிர கிட்டத்தட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன என்பதும் எந்த விதமான போக்குவரத்திற்கும் அனுமதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தினால் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு 35 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறி இருப்பதாகவும் இது குறித்து முடிவெடுக்க இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது
மேலும் ஒரு வாரம் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? அல்லது பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் மட்டும் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்திவிட்டு மற்ற மாவட்டங்களில் ஒரு சில கடைகள் திறக்க அனுமதிக்கப்படுமா என்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. அதன்பின்னர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
