Connect with us

அடுத்தடுத்து அரங்கேறும் பயங்கரம்..! கேரளாவில் 4 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு …

ஊரடங்கு

செய்திகள்

அடுத்தடுத்து அரங்கேறும் பயங்கரம்..! கேரளாவில் 4 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு …

அடுத்தடுத்து அரங்கேறும் பயங்கரம்..! கேரளாவில் 4 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு …

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் இரண்டு அரசியல் பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மேலமுரியை சேர்ந்தவர் ஸ்ரீநிவாசன். இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம்களில் உடற்கல்வி பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஸ்ரீநிவாசன் கடையில் இருந்த போது 5 பேர் சேர்ந்த கும்பல் ஸ்ரீநிவாசனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

அதே போல கடந்த வெள்ளிகிழமையில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த சுபைர் என்பவர் தொழுகை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரது பின்னால் வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதனால் நிலைத்தடுமாறி கீழே விழுந்த சுபைரை காரில் வந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தினால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தடை வரும் ஏப்ரல் 20- ஆம் தேதி மாலை 6 மணி வரையில் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டு   மாநிலம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top