Connect with us

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் முக்கிய ஆலோசனை!

Tamil Nadu

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் முக்கிய ஆலோசனை!

b421492acfa132d737b6283f1ce9a674

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் தளர்வுகள் அதிகப்படுத்துவது, கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துவது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சேலம் ஈரோடு திருப்பூர் கோவை சென்னை ஆகிய பகுதிகளில் அதிகரித்து வருவதை அடுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் நாளை பிற்பகல் 12 30 மணிக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை செய்ய உள்ளார் 

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக்கு பின்னர் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக சென்னை உள்பட ஒரு சில பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

மேலும் பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் இப்போதைக்கு திறக்கப்பட மாட்டாது என்றும் மூன்றாவது அலை குறித்து மருத்துவ நிபுணர்களின் கருத்தை பொறுத்தே இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top