Connect with us

ஊரடங்கு மேலும் நீட்டிப்பு மே 24 வரை! “இரண்டு வார காலம்”

News

ஊரடங்கு மேலும் நீட்டிப்பு மே 24 வரை! “இரண்டு வார காலம்”

roads-empty-markets-shut-as-delhi-enters-weekend-curfew-due-to-covid-19-pandemic

தற்போது நாடெங்கும் பல மாநிலங்களில் பல்வேறு உத்தரவுகள் அம்மாநில அரசு பிறப்பித்து வருகிறது. மேலும் ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளன. காரணம் என்ன நாடெங்கும் மீண்டும்  தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேரம் ஊரடங்கும் பல மாநிலங்களில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் நம் தமிழகத்திலும் திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.c8f772e257f2a50dd19f990cf6d32de6

இதனால் ஊரடங்கிற்காக தமிழக மக்கள் மிகவும் முன்னேற்பாடுகளுடன் தயாராகி வருகின்றனர். நமது அண்டை மாநிலமாகவும்,யூனியன் தேசமாகவும் உள்ளது புதுச்சேரி. புதுச்சேரியில் தற்போது ஆட்சியைப் பிடித்துள்ளது பாஜக மற்றும் என் ஆர் காங்கிரஸ் கூட்டணி.மேலும் புதுச்சேரி மாநிலத்தில் முதல்வராக உள்ளார் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ரங்கசாமி.இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் அம்மாநில அரசு ஊரடங்கு குறித்து பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி புதுச்சேரியில் மே 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு உள்ளதாக அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் மளிகை காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதித்துள்ளது அம்மாநில அரசு. இது போன்று இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் பல கட்டுப்பாடுகளுடன் ஊரில் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top