Connect with us

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு..? – சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி !!

ஊரடங்கு

தமிழகம்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு..? – சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி !!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு..? – சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி !!

இந்தியாவில் டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கடந்த ஒருவாரகாலமாக அதிகரித்து வருகிறது. இதனால்  அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில் சென்னை ஐஐடி மாணவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டதையடுத்து   தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இதனிடையே நேற்று தமிழக முதல்வர் காணொளி வாயிலாக அதிகாரிகள் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தொற்றில் இருந்து பாதுகாத்திட அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயம் என கூறினார்.

இதனையடுத்து அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கூறினார். இந்த சூழலில் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வரமா? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்தது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்துவதற்கு வாய்ப்பில்லை என்றும் ஊரடங்கு குறித்து வதந்திகள் வந்தால் நம்பவேண்டாம் என கூறியுள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top