தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? முதல்வர் ஆலோசனை !!

கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவியதையடுத்து தற்போது சீனாவில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவதை குறித்து முதல்வர் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 31, 356 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில் அதிக பட்சமாக சென்னை, செங்கல்பட்டில் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் மக்கள் பொது இடங்களில் முககவசம் அணியவும், சமூக இடைவெளிகளை கடைபிடித்துக்கொண்டு அனைவரும் தடுப்பூடி செலுத்திகொள்ள வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வருகிறார்.

இந்த கட்டுப்பாடு தளர்வுகள் இம்மாதம் இறுதி வரையில் இருக்கும். இந்த சூழலில் தமிழக முதல்வர் கொரோனா கட்டுப்பாடு தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதன் அடிப்படையில் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்த அறிவிப்புகள் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment