மீண்டும் ஊரடங்கு! ஆனால் இந்த முறை கொரோனா கிடையாது!! பின்ன என்ன காரணம்?

இரண்டு வருடங்களாக நம் இந்தியாவில் ஊரடங்கு என்பது சாதாரண ஒன்றாக மாறியது. இந்த நிலையில் இந்த ஊரடங்கு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. கடந்த சில வருடங்களாக கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

மோன்

ஆனால் இந்த முறை தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி நாகலாந்து மாநிலத்தில் அப்பாவி தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து மோன் மாவட்டத்தில் பதற்றம் நிலவியது.

பதற்றத்தை கட்டுப்படுத்த மோன் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பகுதியை நாகலாந்து மாநில முதல்வர் இன்று பார்வையிடுகிறார்.

முன்னதாக இன்று காலை நாகலாந்து மாநில முதல்வர் அங்கு அமல்படுத்தப்பட்டுள்ள ராணுவ சட்டங்களை நீக்கி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு காரணமான பாதுகாப்பு படையினரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. அப்பாவி தொழிலாளர்களை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படையினர் மீது விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து நாகலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment