மத்திய பல்கலை. முதுகலை படிப்புகளுக்கான CUET நுழைவுத்தேர்வு எப்போது..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்பு படிப்பதற்கான CUET நுழைவுத்தேர்வு எப்போது என்பது குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களில் முதுகலை கல்லூரி படிப்புகளுக்கான CUET என்ற பொதுத் தேர்வு ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கிவரும் கல்வி நிலையங்களில் இளங்கலை மற்றும் முதுகலை கல்லூரி படிப்புகளுக்கு CUET என்ற பொதுத் தேர்வு கட்டாயம் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

cuet1மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கிவரும் கல்வி நிலையங்களில் இளங்கலை மற்றும் முதுகலை கல்லூரி படிப்புகளுக்கு மாணவர்களின் 12-ம் வகுப்பு மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படாது என்றும் இந்த பொதுத்தேர்வில் கிடைக்கும் மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொது தேர்வில் மூன்று பிரிவுகளாக கேள்விகள் கேட்கப்படும் என்றும் முதல் பிரிவில் கட்டாயமாக மொழித்தேர்வு இருக்கும் என்றும் இரண்டாவது பிரிவில் விருப்பமான மொழியில் மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் மூன்றாவது பிரிவில் பொதுவான கேள்விகள் கேட்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பிரிவில் பொது அறிவு, நாட்டின் நடப்பு, கணக்கு திறன், பகுத்தறிவுத் திறன் ஆகியவை கேள்விகளாக கேட்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பொதுத் தேர்வை எழுத விருப்பப்படும் மாணவர்கள் கீழ்க்கண்ட இணைய தளங்களில் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தேசிய தேர்வு முகமை வலைதள முகவரி : nta.ac.in

CUET வலைதளம்: cuet.samarth.ac.in

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.