Connect with us

CUET தேர்வால் மாநிலங்களின் உரிமை பாதிக்கப்படுகிறதா..? – ஒன்றிய அரசு விளக்கம்!!

exam pattern 1575515403 1635852860

செய்திகள்

CUET தேர்வால் மாநிலங்களின் உரிமை பாதிக்கப்படுகிறதா..? – ஒன்றிய அரசு விளக்கம்!!

CUET தேர்வால் மாநிலங்களின் உரிமை பாதிக்கப்படுகிறதா..? – ஒன்றிய அரசு விளக்கம்!!

CUET எனப்படும் மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத்தேர்வுவால் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பாதிக்கப்படாது என ஒன்றிய அரசு விளக்கமளித்துள்ளது.

ஒன்றிய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத் தேர்வை நடத்தப்படுவதை கைவிடக் கோரி தமிழக சட்டப்பேரவையில் சில தினங்களுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர்   பொன்முடிக்கு ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் 2020- ஆம் ஆண்டில் புதிய தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாகவே மத்திய பல்கலைக் கழகங்களுக்கு பொது நுழைவுத்தேர்வு அறிமுகப்படுத்தியதாக தெரிவித்தார்.

இதற்காக பல்வேறு நிபுணர்களுடன் கலந்தாய்வு செய்து CUET எனப்படும் மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத்தேர்வு முடிவு செய்யப்பட்டதாக பிரதான் குறிப்பிட்டுள்ளார். பொதுப்பட்டியலில் கணிப்பு இருப்பதால் அதனை மேம்படுத்தும் நோக்கத்தை கொண்டு ஒன்றிய பல்கலைக்கழகங்களில் 13 மொழிகளில் பொது நுழைவுத்தேர்வை எழுத வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

ஒரே விண்ணப்பத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் விண்ணப்பிக்க முடியும் என்பதால் ஏழை மாணவர்களின் நிதி சுமை குறையும் என பிரதான் தெரிவித்தார். குறிப்பாக கோச்சிங் கலாச்சாரத்தை ஒழிப்பதற்காகவே நுழைவுத் தேர்வை கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top