
தமிழகம்
கடலூர் ‘கண்ணகி-முருகேசன்’ ஆணவக்கொலை-9 பேருக்கு ஆயுள் தண்டனை!!
2003 ஆம் ஆண்டு தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில் ஆணவக்கொலை ஒன்று கடலூர் மாவட்டத்தில் அரங்கேறியது. இந்தக் கொலையில் தற்போது 9 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி காதல் திருமணம் செய்துகொண்ட கண்ணகியின் தந்தை துரைசாமி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கடலூர் கண்ணகி- முருகேசன் தம்பதி ஆணவ கொலை வழக்கில் தண்டனை குறைக்கப்பட்டு உள்ளது.
ஆணவ கொலை வழக்கில் கண்ணகியின் அண்ணன் மருது பாண்டியனுக்கு தூக்கு தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது. கடலூர் ஆணவ கொலை வழக்கிலிருந்து ரங்கசாமி மற்றும் சின்னதுரை விடுவித்து ஐகோர்ட் தீர்ப்பளித்தது.
முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் தமிழ்மாறனின் ஆயுள் தண்டனையை ரத்து செய்த ஐகோட் 2 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது. கடலூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
கடலூர் கண்ணகி-முருகேசன் தம்பதியினர் கொலை வழக்கு மேல்முறையீட்டு மனு மீது உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தலித் சமூகத்தைச் சேர்ந்த முருகேசன் மாற்று சமூகத்தை சேர்ந்த கண்ணகியை கடந்த 2003ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார்.
திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த கண்ணகியின் குடும்பத்தினர் இருவரையும் விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் கண்ணகியின் அண்ணனுக்கு மரண தண்டனையும் எஞ்சிய 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கியது நீதிமன்றம்.
