இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கடலூர் மீன்வளத்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்று வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் கடலூர் துறை முகத்தில் 1 எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் கடலில் சூறைகாற்றானது 45-55 கி.மீ வேகத்தில் வீசும் என வானிலை எச்சரிக்கை பெறப்பட்டுள்ளது.
ஆகவே கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தேவனாம்பட்டினம், தாழங்குடா, சோனாங்குப்பம், சொத்திகுப்பம், ராசாப்பேட்டை உள்ளிட்ட 49 மீனவ கிராமத்தில் உள்ள அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் இன்று (31.01.2023) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல கூடாதென கடலூர் மீனவளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மேலும் ஏற்கனவே கடலில் உள்ள தங்குகடல் விசைப்படகுகள் அருகில் உள்ள துறைமுகம்/இறங்குதளங்களுக்கு பாதுகாப்பாக கரைதிரும்ப வேண்டும் என அறிவித்துள்ளனர்.