
Tamil Nadu
கடலூர் பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்!
கடலூர் அருகே எம்.புதூர் என்ற இடத்தில் நாட்டு பட்டாசு தயாரிக்கும் ஆலை உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 7 பேர் கொண்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது திடீரென பயங்கர சத்தம் கேட்டதாக தெரிகிறது.
இதனால் பதறிப்போய் அருகிலிருந்தவர்கள் வந்து பார்த்தபோது ஆங்காங்கே உடல்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வந்து பார்த்தபோது அடையாளம் தெரியாமல் மூன்று பேர் சிதறி கிடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தினால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு குவிந்து உள்ளதாக தெரிகிறது.
இந்த விபத்தில் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த சூழலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதல்வர் கூறியுள்ளார்.
