#Breaking ஜனவரி 6 உள்ளூர் விடுமுறை; கடலூர் மாவட்ட மக்களுக்கு குஷியான செய்தி!

கடலூர் மாவட்டத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வருகிற 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், சிதம்பரம் அருள்மிகு நடராஜர் திருக்கோவில் (அருள்மிகு சபாநாயகர் திருக்கோயில்;) ஆருத்ரா தரிசனம் நடைபெறும் நாளான 06.01.2023 வெள்ளிக் கிழமை கடலூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில்; ஜனவரி மாதத்தில் விடுமுறை நாளான 28.01.2023 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும், உள்ளுர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் 06.01.2023 வெள்ளிக் கிழமை அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும் என அறிவிக்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.