முகத்தினை பளபளன்னு மாற்றச் செய்யும் வெள்ளரிக்காய் ஃபேஸ்பேக்!!

a4295f26a073abb95fd9b2c5f825de33-3

முகத்தினை பளபளன்னு மாற்றணும் அப்டின்னா பார்லர் போகணும்னு அவசியமில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே முகத்தினை பளபளன்னு மாற்றுவது எப்படி என்று நான் சொல்கிறேன்.

தேவையானவை:
வெள்ளரிக்காய்- ½
கற்றாழை- ½ கீற்று
புதினா- கைப்பிடியளவு

செய்முறை:
1.    வெள்ளரிக்காயை கழுவி தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 
2.    அடுத்து கற்றாழையின் தோலை சீவி இருபுறமும் உள்ள முட்களை எடுத்துக் கொள்ளவும்.
3.    அடுத்து புதினாவின் இலைகளை ஆய்ந்து கொள்ளவும்.
4.    இறுதியில் இவை மூன்றையும் மிக்சியில் போட்டு அரைத்தால் வெள்ளரிக்காய் ஃபேஸ்பேக் ரெடி.
இந்த வெள்ளரிக்காய் ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து முகத்தினைக் கழுவவும்.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.