தங்கத்தை தவறவிட்ட சிஎஸ்கே-தட்டி தூக்கிய ஆர்சிபி! இனி ABD-க்கு பதில் இவர்தான்!

இன்று பெங்களூருவில் 2022-ஆம் ஐபிஎல்கான ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் முதல் வீரராக ஷிகர் தவனை 8.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது. அதிகபட்சமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஸ்ரேயாஸ் அய்யரை 12.25 கோடிக்கு பெற்றது.

ரபாடாவை 9.25 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது. டிரண்ட் போல்ட்டை 8 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது. இந்த நிலையில் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னரை ஹைதராபாத் அணி ஏலத்தில் வாங்க மறுப்பு தெரிவித்தது.

இதனால் 6.25 கோடிக்கு டெல்லி அணி டேவிட் வார்னரை தன்வசம் இழுத்துக் கொண்டது. அதேவேளையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஓபனிங் பேட்ஸ்மேன் டிக்காக்கை புதிதாக களமிறங்கியுள்ள லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 6.75 கோடிக்கு வாங்கியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பல்வேறு வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த டுப்லஸ்ஸிஸ் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு 7 கோடிக்கு வாங்கியது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி 6.25 கோடிக்கு குஜராத் அணியால் வாங்கப்பட்டு உள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...