ஐபிஎல் இறுதி போட்டியில் சிஎஸ்கே-குஜராத் மோதல்.. யாருக்கு கோப்பை?

கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்திற்கு வந்த நிலையில் நாளை சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. நாளைய இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த ஆண்டின் சாம்பியன் பட்டம் பெரும் அணி என்பதால் இரு அணிகளும் தீவிரமாக மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் குஜராத் அணியும் இரண்டாவது இடத்தில் சிஎஸ்கே அணியும் இருந்தபோதிலும் பிளே ஆப் போட்டியில் சிஎஸ்கே அணி குஜராத்தை வீழ்த்தி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆனால் பிளே ஆப் 2 போட்டியில் மும்பை அணியுடன் மோதி வெற்றி பெற்ற குஜராத் அணி தற்போது மீண்டும் சென்னை அணியுடன் இறுதி போட்டியில் மோத உள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராயல் ராஜஸ்தான் அணியை மிக எளிதில் குஜராத் அணி வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது போல் இந்த ஆண்டு சிஎஸ்கே அணியை அவ்வளவு எளிதில் வீழ்த்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அகமதாபாத் மைதானத்தில் குஜராத் அணிக்கு ஆடியன்ஸ் சப்போர்ட் இருந்தாலும் சென்னை அணியை பொறுத்தவரை எந்த மைதானத்தில் விளையாடினாலும் அந்த அணிக்கு ஆடியன்ஸ் ஆதரவு கிடைக்கும் என்பதை நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் அகமதாபாத் மைதானத்திலும் குஜராத் அணிக்கு இணையாக சென்னை அணிக்கும் ஆடியன்ஸ் ஆதரவு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் அணியை வீழ்த்த முடியாமல் இருந்த சிஎஸ்கே அணி பிளே ஆப் 1 போட்டியில் வீழ்த்தி நம்பிக்கையுடன் உள்ளது என்பதும் அதேபோல் இறுதி போட்டியிலும் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெரும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் குஜராத் அணியை பொறுத்தவரை சுப்மன் கில் ஒரு பலமான பேட்ஸ்மேனாக இருப்பதால் அவர் அந்த அணியை தனியாளாகவே நின்று வெற்றிக்கு கொண்டு செல்வார் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. எனவே தல தோனியின் முதல் குறி சுப்மன் கில்லாகத்தான் இருக்கும் என்றும் அவரை அவுட் ஆக்குவதில் அவர் தனது அனைத்து தந்திரங்களையும் கடைப்பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் அணியை பொறுத்தவரை சஹா, சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா டேவிட் மில்லர், ராகுல் திவெட்டியா, ரஷித் கான் ஆகிய பேட்ஸ்மேன்கள் நல்ல பார்மில் உள்ளனர்/ அதேபோல் பந்து வீச்சிலும் குஜராத் அணி சிறப்பாக உள்ளது குறிப்பாக முகமது ஷமி அபாரமாக பந்து வீசி வருகிறார், ரஷித்கான் விக்கெட் எடுக்கும் ஒரு பந்துவீச்சாளராக உள்ளார்

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சளைத்தது அல்ல என்பதை கடந்த சில போட்டிகளில் நிரூபித்து வருகிறது. பேட்ஸ்மேன்களை பொறுத்தவரை சென்னைக்கு சூப்பர் கிங்ஸ் அணி அபாரமான லைன் அப் வைத்துள்ளது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர்களான ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் கான்வே இருவரும் நல்ல பார்மில் உள்ளனர், அதேபோல் ஷிவம் துபே, அம்பத்தி ராயுடு, மொயின் அலி, ஜடேஜா, தோனி ஆகியவர்களும் ரன் மெஷின்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சை பொறுத்தவரை மதிஷா பதிரனா, ஜடேஜா, துஷாரா தேஷ்பாண்டே, மொயின் அலி ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

எனவே நாளைய போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பதை கணிக்க முடியாத அளவுக்கு சவாலான போட்டியாக இருக்கும் என்பதும் ரசிகர்களுக்கு ஒரு மிகச்சிறந்த ஃபைனல் விருந்தாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நாளைய போட்டியில் டாஸ் மிகவும் முக்கியம் என்று கருதப்படுகிறது .

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...