டோனிக்கு பாராட்டுவிழா! சிஎஸ்கேவுக்கு வெற்றி விழா! சிறப்பு விருந்தினராக ஸ்டாலின்!

கடந்த மாதம் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாக கோப்பையை தட்டி தூக்கியது. அதுவும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான நான்காவது ஐபிஎல்  கோப்பை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்கே

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் சென்னையில் வைத்து சிஎஸ்கேக்கு பாராட்டு விழா நடைபெறும் என்று கூறியிருந்தார். அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் மாலை 5:30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.

இதில் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் இதர சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கும் விருது வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாராட்டு விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

இந்த நிலையில் முன்னாள் இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி வெற்றி விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துவிட்டார்.அவர் பலத்த பாதுகாப்போடு கலைவாணர் அரங்கத்திற்கு புறப்பட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment