சிஎஸ்கே அணிக்கு ஆபத்தாக இருக்கும் 4 அணிகள்: பிளே ஆஃப் வாய்ப்புகள் என்னென்ன?

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கிட்டத்தட்ட இறுதி கட்டத்திற்கு வந்துள்ள நிலையில் இன்னும் ஒரு சில லீப் போட்டிகள் மட்டுமே இருப்பதால் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் என்ற கணக்கை ரசிகர்கள் கால்குலேட்டர் வைத்து போட்டுக் கொண்டிருக்கின்றனர்

இன்னும் 8 லீக் போட்டிகள் மட்டுமே இருக்கும் நிலையில் பல அணிகள் ரொம்பவும் நெருக்கமாக புள்ளிகளை கொண்டு இருப்பதால் குஜராத் தவிர வேறு எந்த அணியும் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை.

csk vs rr2 15 புள்ளிகளுடன் இருக்கும் சிஎஸ்கே அணியை பொறுத்தவரை வரும் 20ஆம் தேதி டெல்லி அணியுடன் மோத இருக்கிறது. அந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று விட்டால் பிளே ஆப் செல்வது உறுதி செய்யப்படும். ஆனால் ஒருவேளை அந்த போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து விட்டால் மற்ற அணிகளின் வெற்றி, தோல்வி தான் சிஎஸ்கே அணியின் ப்ளே ஆப் சுற்று அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இன்று நடைபெறும் போட்டியில் மும்பை மற்றும் லக்னோ அணியில் எந்த அணி வெற்றி பெற்றாலும் சென்னை அணிக்கு ஆபத்துதான். மும்பை வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு சென்று விடும். லக்னோ நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற்று விட்டால் சென்னையை பின்னுக்கு தள்ளி விடும்.

csk vs rr2 1பெங்களூரு பஞ்சாப் ஆகிய இரண்டு அணிகளுக்கும் இன்னும் இரண்டு போட்டிகள் இருப்பதால் இரண்டு அணிகள் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் சிஎஸ்கே வின் பிளே ஆஃப் கனவு தகர்த்த அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: சிஎஸ்கே தோல்வியை கொண்டாடும் மும்பை உள்பட 6 அணிகள்.. காரணம் இதுதான்..!

லக்னோ அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் கொல்கத்தா அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் சிஎஸ்கே அணிக்கு ஆபத்தாக முடியும். மொத்தத்தில் சிஎஸ்கே அணி இன்னும் ஒரு போட்டியில் வென்றால் மட்டுமே உறுதியாக பிளே ஆப் செல்ல முடியும் என்ற நிலையில் உள்ளதால் அடுத்த போட்டியில் டெல்லியை வீழ்த்த சிஎஸ்கே அணி சரியாக திட்டமிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...