சிஎஸ்கே தக்க வைத்து கொள்ளும் 3 வீரர்கள்

சிஎஸ்கே

14வது ஐபிஎல் போட்டி சமீபத்தில் நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது

தல தோனியின் பிரமாண்டமான வழிநடத்தலில் ருத்ராஜ் உள்பட இளம் வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிபிடத்தக்கது

இந்த நிலையில் அடுத்த ஆண்டு 2 புதிய அணிகள் ஐபிஎல் தொடரில் இணைய உள்ளதை அடுத்து மீண்டும் அனைத்து வீரர்களும் ஏலத்தில் விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஒவ்வொரு அணியும் 3 வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை அணியை பொறுத்தவரை தோனி, ஜடேஜா மற்றும் ருத்ராஜ் ஆகிய மூன்று வீரர்களை தக்கவைத்துக்கொள்ள அணி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print