சிஎஸ்கே அணி அபார வெற்றி.. புள்ளிப்பட்டியலில் இரண்டாமிடம்..!

இன்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இன்றைய போட்டியில் தல தோனி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணி ஆரம்பத்திலிருந்து தடுமாறிய நிலையில் 20 ஓவர்களில் 139 ரன்கள் மட்டுமே எடுத்தது

Doni
Doni

இதனை அடுத்து 140 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 17.4 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 14 ரன்கள் எடுத்தது. வின்னிங் ஷாட்டை தல தோனி ஆடினார் என்பதும் அவர் களத்தில் இருந்தபோது ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து 13 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியல் இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்னும் ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...