தட்டித்தூக்கிய தல தோனி.. முதலிடத்தில் சிஎஸ்கே அணி..!

நேற்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி அபாரமாக விளையாடி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தது. 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுதான் அதிகபட்ச ரன்கள் என்பதும் இதற்கு முன்பு 228 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

csk1

இந்த நிலையில் 236 என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணிக்கு முதல்  இரண்டு ஓவர்களில் இரண்டு விக்கெட் விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  இதனை அடுத்து ஜேசன் ராய் மற்றும் ரிங்கு சிங் ஓரளவுக்கு அடித்து ஆடினாலும் அந்த அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனை அடுத்து சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியின் முடிவில் சென்னை அணி 10 புள்ளிகள் உடன் முதல் இடத்தை பெற்றது என்பதும் ராஜஸ்தான் லக்னோ அணிகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று தோல்வி அடைந்த கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது.
csk1a
நேற்றைய போட்டியில் கொல்கத்தாவில் நடந்த நிலையிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் மைதானத்தில் மிகப்பெரிய ஆதரவு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எங்கு பார்த்தாலும் மஞ்சள் ஜெர்சி அணிந்த ரசிகர்கள் இருந்ததை பார்த்து தோனி நெகிழ்ச்சி அடைந்தார்.

போட்டி முடிந்தததும் அவர் கூறிய போது கொல்கத்தாவில் நான் நிறைய கிரிக்கெட் விளையாட்டியுள்ளேன்.  நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து பெரும் வெற்றியின் காரணமாக அணிக்குள்ள ஒரு நம்பிக்கை கிடைத்துள்ளது. குறிப்பிட்ட ஒரு வீரர் நன்றாக விளையாடுவதை விட அணியாக சிறப்பாக விளையாடும் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...