தான் அடித்த சிக்சரால் உடைந்த கண்ணாடியை பார்த்த ஷிவம் துபே.. வைரல் புகைப்படம்..!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடந்த நிலையில் இந்த போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் சென்னை அணியின் ஷிவம் துபே அதிரடியாக விளையாடினார் என்பதும் அவர் 27 பந்துகளில் 52 ரன்கள் குவித்தது சென்னை அணியின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் தனது 52 ரன்களில் 5 சிக்சர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகள் அடித்தார் என்பதும் அவரது ஒவ்வொரு சிக்ஸர்களும் தெறிக்க வைக்கும் அளவிற்கு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

shivam dube1

இந்த நிலையில் நேற்று அவர் அடித்த சிக்சர் காரணமாக கண்ணாடி சிதறிய நிலையில் தான் அவுட் ஆகி உள்ளே வந்ததும் அந்த சிதறிய கண்ணாடியை அவர் பார்த்து ரசித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஷிவம் துபே அடித்த ஒரு சிக்ஸர் 111 மீட்டர் சென்ற நிலையில் போட்டியாளர்கள் இருக்கும் அறையின் கண்ணாடி உடைந்து சிதறியது என்பது குறிப்பிடத்தக்கது.

shivam dube4

மேலும் சிவம் துபாய் கடந்த 2020 ஆம் ஆண்டு வரை பெங்களூரு அணியின் வீரராக இருந்தார் என்பதும் அந்த அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று அவர் பெங்களூரு அணிக்கு எதிராக அடித்த அதிரடி ஆட்டம் பெங்களூர் அணியினர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

shivam dube3

சென்னை அணியில் அவர் 2021ஆம் ஆண்டு முதல் இருந்து வரும் நிலையில் பெங்களூரு அணிக்கு எதிராக அவர் அதிரடி ஆட்டம் ஆடி வருகிறார். 2021ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிராக 46 ரன்கள், 2022 ஆம் ஆண்டில் பெங்களூரு அணிக்கு எதிராக 95 ரன்கள் நேற்று நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 52 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

shivam dube

ஷிவம் துபேயின் அதிரடியை கட்டுப்படுத்த முடியாமல் ஒரு கட்டத்தில் பெங்களூர் பந்து வீச்சாளர்கள் திணறிய நிலையில் கடைசியில் ஒரு வழியாக பர்னல் பந்துவீச்சில் முகமது சிராஜ் கேட்ச் பிடிக்க  ஷிவம் துபே ஆட்டம் இழந்தார். அவர் ஆட்டம் இழக்காமல் இருந்திருந்தால் நேற்றைய போட்டியில் சென்னை அணியின் ஸ்கோர் 250ஐ தாண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் போட்டி முடிவடைந்ததும் தோனி பேட்டி அளித்தபோது ஷிவம் துபே நல்ல உயரமாக இருப்பதால் அவருக்கு பெரிய ஷாட்கள் அடிப்பது மிகவும் எளிதாக இருக்கிறது என்றும் இது சென்னை அணிக்கு கிடைத்த வரப்பிரசதமாக கருதுகிறேன் என்றும் தெரிவித்தார். மேலும் ஷிவம் துபே இன்னும் பல போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார் என்று நம்பிக்கை உள்ளது என்றும் அவர் ஒரு நல்ல பேட்ஸ்மேனாக திகழ்வார் என்றும் தோனி கணித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...