தடாலடி கொடுத்த “தல தோனி”! பைனல்ஸில் கால்வைத்த “சிஎஸ்கே”!!

இன்றைய தினம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் குவாலிபயர் ஒன்றாவது போட்டி நடைபெற்றது. அதில் டெல்லி கேப்பிட்டல் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது.சிஎஸ்கே- டிசி

முதலில் களமிறங்கிய டெல்லி கேப்பிடல் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் 173 ரன்களை இலக்காக நோக்கி இன்னிங்சை தொடங்கியது சிஎஸ்கே.

சிஎஸ்கே வின் ஓபனிங் பிளேயரான ஃபேப் டு பிளேசிஸ் ஆரம்பத்திலேயே அவுட்டானார். அதன்பின்னர் ருத்ராஜ் கெய்த்வாடுடன் ராபின் உத்தப்பா இணைந்து களமிறங்கினார்.

ராபின் உத்தப்பா ஆரம்பம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவர் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 63 ரன்களை எடுத்து டாம்கரன் ஓவரில் அவுட்டானார்.

 ருத்ராஜ் கெய்க்வாட்சிஎஸ்கே வின் அதிகபட்சமாக ருத்ராஜ் கெய்க்வாட் இரண்டு சிக்சர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகளுடன் 70 ரன்களுக்கு ஆவேஸ் கான் ஓவரில் அவுட் ஆனார்.

தோனி இறுதியாக களமிறங்கிய கேப்டன் மகேந்திரசிங் தோனி தனது ஆரம்பத்திலேயே சிக்ஸ்சரோடு தனது ரன்னை பதிவு செய்தார். இதனால் கடைசி ஓவரை வீசிய டாம் கரணை துவம்சம் செய்தார் தல டோனி.

சிஎஸ்கேஇதனால் இறுதியில் சிஎஸ்கே அணியானது 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதோடு மட்டுமில்லாமல் சிஎஸ்கே இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இதனால் சிஎஸ்கே ஃபேன்ஸ் மத்தியில் மிகுந்த சந்தோஷம் காணப்படுகிறது.மேலும் ராபின் உத்தப்பா மற்றும் தல தோனி ஆகிய இருவரும் தங்கள் பழைய ஃபார்மிற்கு திரும்பி வந்ததும் அவர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment