கிரிப்டோகரன்சிக்கு இனி 30 சதவீதம் வரி! பட்ஜெட் தாக்கலில் நிதியமைச்சர்;
இன்று காலை நாடாளுமன்றத்தில் 2022 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. சரியாக 11 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதில் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியானது. குறிப்பாக ரயில்வே, இயற்கை விவசாயம், நீர்ப்பாசனத் திட்டம் உள்ளிட்ட பல அத்தியாவசிய தேவைகளுக்கான நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது.
அதோடு மட்டுமல்லாமல் நவீன முறை அதாவது டிஜிட்டல் பண பரிவர்த்தனை உள்ளிட்ட இணையத்தை மையமாக கொண்டுள்ள திட்டங்களும் இன்று காலை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சி மூலம் பெறப்படும் வருவாய் சுமார் 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இந்தியாவுக்கு என பிரத்தியேக கிரிப்டோகரன்சி உருவாக்கப்படும் என்று அவர் அறிவித்தார். மேலும் தபால் கணக்கிலிருந்து வங்கி கணக்கிற்கு பணம் பரிவர்த்தனை செய்ய முடியும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். இந்தியாவில் சுமார் 25 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கிகள் உருவாக்கப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
