திரையரங்குகளில் அமைக்கப்படும் ‘அழுமை அறை’: எதற்கு தெரியுமா?

கேரளாவில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் அழுகை அறை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரையரங்குகளில் கைக்குழந்தையுடன் சினிமா பார்க்க வருபவர்கள் திடீரென குழந்தை அழுதால் தர்ம சங்கடத்திற்கு உள்ளாவார்கள் என்பது தெரிந்ததே.

குழந்தையின் அழுகையை நிறுத்த பெற்றோர்கள் மிகுந்த பாடுபடுவார்கள் என்பதும், சிலசமயம் படம் பார்க்காமலேயே பெற்றோர்கள் குழந்தையுடன் தியேட்டரை விட்டு வெளியேறி விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது குழந்தை அழுதால் குழந்தையின் பெற்றோருக்கு மட்டுமின்றி அருகில் உட்கார்ந்து இருப்பவர்களுக்கும் தொந்தரவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதனை கருத்தில் கொண்டு கேரளாவைச் சேர்ந்த அரசுக்கு சொந்தமான தியேட்டரில் அழுகை அறை என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த அழுகை அறையில் குழந்தைகள் அழுதால் வெளியே சத்தம் கேட்காத வகையில் கண்ணாடி அமைக்கப்பட்டிருக்கும் .

அதுமட்டுமின்றி குழந்தைக்கு தேவையான தொட்டில் உள்பட ஒரு சில வசதிகளும் செய்யப்பட்டு உள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. கேரள அரசு திரையரங்குகளில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து தனியார் திரையரங்குகளிலும் விரைவில் இந்த அழுகை அறை வசதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.