ஓடும் ரயிலில் இருந்து சிறுவனை தள்ளிவிட்ட கொடூர இளைஞன்..! வெளியானது அதிர்ச்சி வீடியோ!!

சமீப காலமாக இந்தியாவில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு சில இடங்களில் ஓடும் ரயில் முன்பு செல்பி எடுப்பது பல்வேறு சாகசங்கள் செய்வதன் மூலம் விபத்துக்கள் ஏற்படுகிறது.

ரயில் விபத்தில் சிக்கினால் கண்டிப்பாக உயிர் இழப்பு ஏற்படும். அந்த வகையில் தமிழகத்தில் ஆங்காங்கே இளைஞர்கள் ரயில் முன்பு வீடியோ எடுத்து பரிதாபமாக உயிரிழந்து கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவரை காதலிக்க வற்புறுத்த கூறிய இளைஞர் அந்த பெண்ணை ஓடும் ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் இன்றளவும் பெரும் பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டு வருகிறது.

இவ்வாறு உள்ள நிலையில் ஓடும் ரயில் உள்ளே இரு இளைஞர்கள் மோதிக்கொண்டு ஒருவரை கீழே தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இந்த சம்பவம் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பீர்பூம் பகுதியில் நடந்துள்ளது.

அந்தபடி சிறுவன் ஒருவர் அங்குள்ள சக மனிதரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் கைகலப்பாக மாறி அந்த சிறுவனை அந்த இளைஞர் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்தான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment