பெற்ற மகள்களை எரித்த கொடூர தாய்: விசாரணையில் பகீர் தகவல்!

ஆந்திர மாநிலம் சித்தூரில் கணவன் கைவிட்டதால் விரக்தியில் 2 பெண் குழந்தைகளை எரித்து தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி அருகே உள்ள மலைப்பகுதியில் பெண் ஒருவர் தன்னுடைய 2 பெண்குழந்தைகளையும் தீயிட்டு கொழுத்தியுள்ளார். இதில் ஒரு பெண் குழந்தை உயிரிழந்தது. மற்றோரு குழந்தை ஆபத்தான நிலையில் உயிரிழந்தது.

மிரட்டும் ‘மாண்டஸ்’ புயல்: நாளை இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

இதனையடுத்து தாயும் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது இதனை பார்த்த பொதுமக்கள் அப்பெண்ணை தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் காவல்நிலையத்திற்கு புகார் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த குழந்தையை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர்.

புயல் எச்சரிக்கை: பாரதிதாசன் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு!!

இதில் புராப்பல்லி கிராமத்தை சேர்ந்த ஜோதி என்பதும் கணவர் விட்டு சென்றதால் வாழ்கையை நடத்த முடியமல் கொடூர சம்பவத்தினை அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.