Connect with us

பொருளாதார மந்த நிலையில் மீண்டும் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை!!!

crude oil

செய்திகள்

பொருளாதார மந்த நிலையில் மீண்டும் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை!!!

கொரோனா, உக்ரைன்-ரஷ்யா போர் என அடுத்தடுத்து நிகழ்வுகள் நடந்து வருவதால் பொருளாதாரம் தற்போது வரை மந்தமான நிலையில் காணப்படுகிறது. இதனால் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை அதிக அளவு விற்பனை செய்யப்பட்டது.

இருப்பினும் கூட இந்தியாவிற்கு ரஷ்யா குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வழங்குவதாக அறிவித்திருந்தது, இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது,

பொருளாதார மந்தமான நிலை அச்சத்தால் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கச்சா எண்ணெய் விலை தற்போது உயர்ந்துள்ளது. அதன்படி பிராண்டு கச்சா எண்ணெய் எதிர்காலம் 0.2% உயர்ந்து பிப்பாய் 95.14 டாலராக உள்ளது.

அமெரிக்காவின் மேற்கு டெக்ஸாஸ் இடைநிலை கச்சா எண்ணெயின் 0.2% உயர்ந்து பிப்பாய் ஒன்றுக்கு 89.18 டாலராக உள்ளது. இதனால் இந்தியாவிலும் கச்சா எண்ணெய் விலை சற்று அதிக அளவில் விற்பனை செய்யப்படலாம் என்று தெரிகிறது.

இந்தியாவிற்கு ஏற்கனவே நட்பு நாடாக ரஷ்யா உள்ள நிலையில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top