என்னை ஆங்கிலத்தில் பேச சொல்ல நீ யார்? நடிகர் சித்தார்த்துக்கு சிஐஎஸ்எப் வீரரின் பதிலடி

நடிகர் சித்தார்த் தனது வயதான பெற்றோரை ஹிந்தியில் பேச சொல்லி சிஆர்பிஎஃப் அதிகாரிகள் துன்புறுத்தினர் என தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் சிஆர்பிஎப் அதிகாரி ஒருவர் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகர் சித்தார்த் தனது சமூக வலைத்தளத்தில் கூட்டமே இல்லாத மதுரை விமான நிலையத்தில் எனது வயதான பெற்றோர்களை சிஆர்பிஎப் அதிகாரிகள் 20 நிமிடம் துன்புறுத்தியதாகவும் என் பெற்றோர் கையில் இருக்கும் நாணயங்களை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள் என்றும் பதிவு செய்திருந்தார்.

siddharth13மேலும் தொடர்ந்து ஹிந்தியில் பேசியதால் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கூறியும் அவர்கள் தொடர்ந்து ஹிந்தியில் பேசினார்கள் என்றும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்றும் தெரிவித்தார்கள் என்றும் கூறியிருந்தார். வேலை இல்லாதவர்கள் எல்லாம் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள் என்றும் அவர் கடுமையாக பதிவு செய்திருந்தார்.

இதற்கு சிஆர்பிஎஃப் அதிகாரி ஒருவர் வீடியோவை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார். அதில் ’என்னை ஹிந்தியில் பேசக்கூடாது ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்று சொல்வதற்கு நீ யார்? என கேள்வி எழுப்பிய அந்த அதிகாரி யாராக இருந்தாலும் சோதனை செய்வது எங்கள் கடமை, எங்களுடைய பெற்றோர்கள் வந்தால் கூட அப்படித்தான் சோதனை செய்வோம் என்றும் சோதனையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும் நாங்கள் வேலை இல்லாமல் இருக்கிறோம் என்று வார்த்தையை அனாவசியமாக பேசக்கூடாது என்றும் நீ தான் வேலை இல்லாமல் இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பெற்றோர் சித்தார்த்தின் பெற்றோரை நாணயத்தை வெளியே எடுக்கச் சொல்லி சொன்னதற்கு எடுக்கச் சொன்னால் எடுத்து காட்டித்தான் ஆகவேண்டும் என்றும் அது எங்கள் கடமை என்றும் அந்தக் கடமையிலிருந்து நாங்கள் தவற முடியாது என்றும் அவர் கூறி உள்ளார். அவர் பேசிய இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.