ஜப்பானில் காகங்கள் – பிரம்மிக்க வைக்கும் தகவல்கள்!

ஜப்பானில் காகங்கள் வரவேற்கப்படும் பறவைகளாக பார்க்கப்படுவதில்லை. காரணம், அவைகள் செய்யும் எரிச்சலூட்டும் வேலைகள்தான். குப்பைகளை தோண்டுவது, அவைகளை தெருக்களில் சிதறடிப்பது மற்றும் பயிர்களை அழிப்பது போன்ற அட்டகாசங்கள்தான்.

ஆனால் ஜப்பானில் விலங்குகளை கொல்வதும் சட்டவிரோதமானது.
எனவே இந்த காகங்ளுக்கு ஒரு தீர்வு காணவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

எனவே நவீன ஒலியியல் கலை மற்றும் நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காகங்களின் உரையாடல்களை கண்டறிய தனிக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

பறவைகளிளின் நடத்தையில் நிபுணத்துவம் பெற்ற ஆராய்ச்சியாளர் நவோகி சுகஹாராவுக்கு இந்த பணி ஒப்படைக்கப்பட்டது. குற்றவியல் தடயங்களை கண்டறியும் துல்லியமான கருவிகளினூடாக காகங்களின் பாசைகள், ரேகைகள் பதிவு செய்யப்பட்டு அவைகளின் செயற்பாடுகளும் ஆராயப்பட்டன.

கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் காகங்களின் சொற்களஞ்சியத்திலிருந்து “நான் உணவை கண்டுவிட்டேன்”, “வாருங்கள், இது பாதுகாப்பான இடம்”, ” இது ஆபத்தான இடம் தப்பித்து செல்லுங்கள்” போன்ற 40 க்கும் மேற்பட்ட வார்த்தைள் அடையாளம் காணப்பட்டன.

இந்த ஆய்வுகளை பரீட்சித்துப் பார்க்கவென
“இங்கு ஆபத்து, இங்கிருந்து ஓடிவிடுங்கள்” என்ற வார்த்தையை ஒலிபெருக்கி மூலம் காகத்தின் பாசையில் வெளியிட்டனர். குப்பை வண்டிகள் வந்து ஊத்தைகளை சேகரிக்கும் வரை காகங்கள் இந்த இடத்தை நெருங்காமல் இருந்ததை அவதானித்தனர்.

பின்னர் அதிகாரிகள் காகங்களுக்கான ஆகாரங்களை வேறொரு இடத்தில் வைத்துவிட்டு, காகங்களின் மொழியில் ஓலிபெருக்கி முலம் “நான் உணவை கண்டுபிடித்தேன்” என்ற வார்த்தையை வெளியிட்டனர். உடனே காகங்கள் குறிப்பிட்ட அந்த இடத்திற்குச் சென்று உணவுகளை உண்பதை அவதானித்தனர்.

இதன் அடிப்படையில் அங்குள்ள விலங்கியல் துறையானது, மற்ற பறவைகள், விலங்குகளின் மொழிகளையும் கண்டறிவதற்கான வேலைப்படுகளை தொடங்கியுள்ளது.

ஜப்பான் நம்மை இன்னும் விதம் விதமாக பிரமிக்க வைத்துக் கொண்டே இருக்கிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment