வலிமை படத்தின் 5-வது நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

கடந்த மூன்று ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் திரையரங்குகளில் எதிர்பார்க்கப்பட்ட படம்  தான் வலிமை. இந்த படத்தில் அஜித் ஹீரோவாகவும் ஹூமா குரேஷி ஹீரோயினி யாகவும் நடித்துள்ளனர்.

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தில் யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி உலகமுழுவதும் 4000 திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்த போதிலும் வசூல் ரீதியில் மாஸ் காட்டியது.

அந்த வகையில் வலிமை படம் வெளிவந்து 5 நாட்கள் ஆகிய நிலையில் உலகம் முழுவதும் ரூ 150 கோடி வசூலை குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், அஜித் நடித்த விஸ்வாசத்தை படமானது மிகப்பெரிய வசூலை குவித்த நிலையில்,  இனி வரும் காலங்களில் வலிமை படம்  விஸ்வாசத்தை கடந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment