News
மழையால் பயிர்கள் சேதம்: நாகையில் விவசாயி தற்கொலை
மழையால் பயிர்கள் சேதம் அடைந்ததால் மன உளைச்சலில் நாகையை சேர்ந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை காரணமாக நல்ல மழை பெய்தது என்பது தெரிந்ததே. ஆனால் இந்த வருடம் புதுமையாக ஜனவரியிலும் மழை பெய்தது. இதனால் அறுவடைக்கு காத்திருந்த பல பயிர்கள் சேதம் அடைந்தன என்பதும் இதனால் ஏராளமான விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நாகை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் பாபு என்ற விவசாயி தனது வயலில் விவசாயம் செய்து இருந்த நிலையில் திடீரென அறுவடை செய்யும் நேரத்தில் கனமழை பெய்ததால் அவருடைய பயிர்கள் அனைத்தும் பாழாகின
இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த விவசாயி ரமேஷ்பாபு வங்கிகளில் கடன் பெற்று சம்பா சாகுபடி செய்திருந்த பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்ததால் அவர் சோகத்துடன் இருந்ததாகவும் இந்த நிலையில் திடீரென அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது
கன மழையால் பயிர்கள் சேதம் அடைந்த காரணத்தினால் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது நாகை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
