டெல்டா மாவட்டங்களின் பயிர் பாதிப்பு- முதல்வரிடம் அறிக்கை தாக்கல்!

கடந்த சில நாட்களாக பெய்த வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் விவசாய பயிர்கள், நெல் மூட்டைகள் அனைத்தும் மழையால் நனைந்து நாசமடைந்தது.

பெரியசாமி

இது குறித்து ஆய்வு செய்ய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் அமைச்சர் குழு ஒன்றை ஏற்படுத்தி இருந்தார். அந்த அமைச்சர் குழு தற்போது டெல்டா பயிர்களைப் நேரில் சென்று ஆய்வு செய்து, டெல்டா பயிர் பாதிப்பு பற்றி முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

தமிழக அரசு

சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அறிக்கை தரப்பட்டது. டெல்டாவில் பயிர் சேதத்தை ஆய்வுசெய்த ஐ.பெரியசாமி தலைமையிலானான ஆறு அமைச்சர்கள் குழு இந்த அறிக்கையினை தாக்கல் செய்துள்ளது.

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், ரகுபதி, அன்பில் மகேஷ், மெய்யநாதன் அடங்கிய குழு இத்தகைய அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் குழு ஆய்வு செய்தது.

நாகை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 68 ஆயிரம் எக்டேர் பயிர் பாதிப்பதாக அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment