இரண்டு ஏக்கருக்கும் குறைவான நிலத்திற்கு பயிர் கடன் ரத்து-இடைக்கால அதிபர் அறிவிப்பு!!

உலக அளவில் பெரும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை நாடு சிக்கியுள்ளது. இதனால் அங்கு மக்கள் தொடர்ந்து கிளர்ச்சி போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். மேலும் அங்கு அடுத்தடுத்து பிரதமர்கள் தங்களது பதவியினை ராஜினாமா செய்து கொண்டு வந்தனர்.

முதலில் மஹிந்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு பின்பு ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பொறுப்பேற்றார். ஆயினும் கூட அவருக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவரும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும் அனைத்துக் கட்சிகள் ஒன்றாக சேர்த்து தற்போது அவரை இடைக்கால அதிபராக அறிவித்துள்ளது. இந்த நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அனைத்து கட்சி ஆட்சியை அமைக்கலாம் என்று இடைக்கால அதிபர் கூறியுள்ளார்.

கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டுக்காக ஒன்றிணைய வேண்டும் என்று கட்சிகளுக்கு ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இரண்டு ஏக்கருக்கும் குறைவான நிலத்திற்கு பயிர் கடன் வாங்கிய விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் ஆன பேச்சுவார்த்தை முடியும் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment