Connect with us

#Breaking மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்… இளையராஜாவை அடுத்து பாக்கியராஜ் சர்ச்சை பேச்சு!

செய்திகள்

#Breaking மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்… இளையராஜாவை அடுத்து பாக்கியராஜ் சர்ச்சை பேச்சு!

#Breaking மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்… இளையராஜாவை அடுத்து பாக்கியராஜ் சர்ச்சை பேச்சு!

இளையராஜாவைத் தொடர்ந்து இயக்குநர் பாக்யராஜூம் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்ததோடு, சர்ச்சை கருத்தையும் கூறி சிக்கலில் சிக்கியுள்ளார்.

ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம் ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் முன்னுரையாக இளையராஜா எழுதியது சர்ச்சையை கிளப்பி வருகிறது.இளையராஜா தனது முன்னுரையில், ‘பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

சமூக நீதி தொடர்பாக பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்ட இளையராஜாவின் இந்த கருத்திற்கு இந்தியா முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் பிரதமடை புகழ்ந்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தமிழகத்தில் இருந்து கர்நாடகவில் சென்று மிக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை என்று பாக்கியராஜ் புகழ்ந்து பேசிய அவர் பிரதமர் மோடி அவர்கள் உலகம் முழுதும் சுற்றி மக்களுக்காக சேவை செய்பவர் என்று பேசினார்.

பிரதமர் மோடி மீது விமர்சனம் செய்பவர்களை அவர் சேவி சாய்க்காமல் கடந்து செல்கிறார் என்றும் பிரதமர் மோடியை விமர்சனம் செய்பவர்கள் அனைவரும் 3 மாதம் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று பிரதமர் நினைத்துக் கொள்ள வேண்டும் என கூறினார் பிரதமர் மோடியின் பெயர் மக்களின் மனதில் பதிந்துள்ளது என்றும் கருத்து தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top